நன்றிகள்

நண்பர்கள் அனைவருக்கும் எனது நன்றிகள் ................ இந்த எழுத்து குடும்பத்தில் சேர்ந்து ஒரு வருடம் இரண்டு மாதங்களை நெருங்கிவிட்டேன் .......... எனது 500 வது படைப்பையும் நேற்று பதித்து விட்டேன் ........... எனக்கு இதுவரை ஆதரவு தந்த தரப்போகும் அனைத்து நண்பர்களுக்கும் எனது நன்றிகள் .........

இக்குழுவில் நான் வந்த புதிதில் எனக்கு அதிகம் அறிவுரைகள் மற்றும் கருத்துக்களை வழங்கிய எத்தனையோ பேர் இன்று இக்குடும்பத்தில் இல்லை .............. எங்கு சென்றார்கள் என தெரியவில்லை ........ பணிச்சுமை காரணமாக இங்கு என்னால் அதிகம் வர இயலவில்லை ............... இன்று பல புது முகங்கள் ........... காலச்சக்கரம் வேகமாய் சுழல்கிறது ............... மாற்றங்கள் வந்தே தீரும் அது இங்கும் நடை பெறுகிறது ....

இது ஒரு மிக சிறந்த குடும்பம் கவி குடும்பம் .............. இங்கு அனைவரும் சிறந்தவர்களே ..... சிறப்பான படைப்பாளர்கள் இங்கு எங்கு பார்த்தாலும் நிறைந்து இருக்கிறார்கள் .......... அவர்களுக்கு மத்தியில் இந்த சிறுவனும் இருப்பது பெருமையாகவும் மகிழ்வாகவும் உள்ளது ............

அனைவருக்கும் எனது நன்றிகள் ...... உங்கள் ஆசிகளால் மேலும் பல கவிதைகளை படைப்பேன் எனும் நம்பிக்கை உள்ளது .............. தொடர்வேன் நன்றி

எழுதியவர் : கவியரசன் (23-Jul-15, 10:09 am)
சேர்த்தது : கி கவியரசன்
Tanglish : nanRikaL
பார்வை : 116

மேலே