​என் வாழ்க்கைப் பயணம் - அனுபவச் சாரல்கள் - 12 ​

சென்ற பகுதியின் இறுதியில் PUC க்காக , வைஷ்ணவ கல்லூரியில் சேர்ந்தேன் . அந்தக் கல்லூரியை பொருத்தவரை , மாணவர் அப்போது பொதுவாக கல்லூரிகளில் மாணவர் பேரவைக்கு தேர்தல் நடைபெறும் . ஒருவர் தலைவராகவும் , மற்றொருவர் செயலாளராகவும் தேர்ந்தெடுக்கப்படுவர் . இதில் அனைத்து மாணவர்களே நேரிடையாக ஒட்டளிப்பர் ...பொது தேர்தல் போலவே . அந்த காலகட்டத்தில் அது ஒரு திருவிழாவை போன்று இருக்கும் . ஆனால் வைஷ்ணவா கல்லூரியில் , அதுபோல அல்லாமல் , வகுப்புக்கு ஒரு மாணவர் தேர்ந்தெடுத்து , அவர்கள் மட்டும் தேர்வு செய்வர் பேரவை நிர்வாகிகளை . அதையும் கல்லூரி நிர்வாகம் ஒப்புக்கொள்ள வேண்டும் . மேலோட்டமாக பார்த்தால் ஒரு சர்வாதிகார போக்காக தெரியும் . எங்களுக்கு அதில் உடன்பாடில்லை. அதுவும் மற்ற கல்லூரிகளில் நடப்பது எங்களுக்கு ஒரு வேட்கையை தூண்டியது. ஆகவே முதன் முதலாக நாங்கள் கேட்டப்போது நிர்வாகம் ஒப்புக்கொள்ளவில்லை . ஆகவே துணிந்து நாங்கள் வகுப்பை புறக்கணித்து ஒன்றுபட்டு சாலைக்கு வந்து கோஷங்கள் எழுப்பினோம் . இரண்டு நாட்கள் தொடரவே .... நிர்வாகத்தினர் அதை தலைகுனிவாக நினைத்து தேர்தல் முறைக்கு ஒத்துக்கொண்டனர் . அந்த இரண்டு நாட்கள் கல்லூரியே எழுச்சியாக இருந்ததை மறக்கவே முடியாது. என் நண்பர் திரு M பாலகுரு அவர்கள் தலைவராகவும் , திரு மகேந்தர் என்று நினைக்கிறன் ( சரியாக நினைவில்லை , வட இந்தியர் ) செயலராக தேர்வு செய்யப்பட்டார் .

நான் அதன்பிறகு பொறியியல் கல்லூரியில் சேர முயற்சித்தேன் .. கிடைக்கவில்லை. அப்பொழுது தனியார் கல்லூரிகள் இப்போது உள்ளது போல கிடையாது . ஏதோ இரண்டு மட்டும் இருந்தது என நினைக்கிறேன். நாவலர் நெடுஞ்செழியன் அவர்களை சென்று பார்த்தேன் ...( அப்போது அவர்தான் கல்வி அமைச்சர் ) ...அவர் ஏன் B Com படிக்கக்கூடாதா ... நான் பச்சையப்பன் கல்லூரிக்கு சிபாரிசு செய்கிறேன் என்றார் . நான் அந்த கல்லூரியில் விண்ணப்பமே போடவில்லை . ( Application Form ).
ஆனாலும் அவர் கைப்படவே எழுதிகொடுத்தார் , ஆனால் நான் B Sc , கணிதமே வேண்டும் என்று கேட்டு வாங்கினேன் . அந்த கல்லூரி காலம் , அந்த மூன்று ஆண்டுகள் வாழ்வை மறக்கவே முடியாது ....இன்பத்தின் உச்சத்தால் இமயம் சென்று தொட்டு வந்த நிலை ....பெரிய தமிழ் அறிஞர்கள் ,சான்றோர் பலர், அரசியல் தலைவர்கள் , என பலவித ஜாம்பாவான்கள் ....படித்த கல்லூரியில் நானும் படிப்பது என்பது மிகவும் பெருமையாக கருதினேன் .

அங்கு முதல் ஆண்டு படிக்கும்போதுதான் நாட்டில் நெருக்கடி நிலை பிரகடனபடுத்தப்பட்டது . ( Emergency ) . நாடே துயரத்தில் ஆழ்ந்தது .....பல தலைவர்கள் சிறைக்கு அனுப்பப்பட்டனர் . மாணவர்கள் மத்தியில் ஒரு கொந்தளிப்பு நிலவிய காலம் அது . சாதாரணமாக அரசியலோ ....வேறு ஏதும் மத்திய அரசுக்கு எதிராகவும் நான்குபேர் சேர்ந்து பொது இடங்களில் பேசக்கூடாது ...நம்மை சுற்றி நிற்பவர்களில் யார் காவல் துறையை சேர்ந்தவர் என்று நம்மால் யூகிக்கவே முடியாது ... பலரும் சீருடை ( UNIFORM ) இல்லாமல் சாதாரண பொது மக்களைப் போன்றே இருப்பார்கள் ... உடனே கைது செய்திட .....ஒருவிதத்தில் சற்று கட்டுப்பாடும் நிலவியது என்பதை மறுக்கவும் இல்லை. பத்திரிகைகளிலும் , நாளிதழ்களும் செய்திகள் கருத்தடை செய்த பிறகே வெளிவரும் ... முக்கிய செய்திகள் கூட இருட்டடிப்பு செய்யப்பட்டன .

ஒருமுறை அப்போது முதல் அமைச்சராக இருந்த இலவச பஸ் பாஸ் ( Bus Pass ) , 15 ரூபாய்க்கு மாணவர்கள் எங்கு வேண்டுமானாலும் நகர் எல்லைக்குள் சென்றுவர , முன்னால் அரசால் கொண்டுவரப்பட்டது என்பதால் நிறுத்திவிட்டார் . அதற்கு அனைத்து கல்லூரி மாணவர்களும் நடத்திய போராட்டமும் , ஊர்வலங்களும் , பேருந்து எரிப்புக்கள் ....இன்றும் நினைவில் உள்ளன....அண்ணா சாலையில் ஊர்வலம் போகும்போது திடீரென்று போலீசார் அடிக்க ஆரம்பித்து விட்டனர். நிறைய மாணவர்கள் தப்பிக்க இப்போதும் உள்ள, அந்த சுரங்கப் பாதையில் சென்று ஒளிந்து கொண்டனர் ... நூற்றுக்கணக்கில் ....உடனே உயர் அதிகாரிகள் உத்தரவின்றி ...அணைத்து வாசல்களும் இழுத்து மூடப்பட்டன ....உள்ளே சிக்கிய அனைவரையும் காவல் துறையை சேர்ந்தவர்கள் ....லத்தியை சுழற்றி விளாசிவிட்டன்ர் .. பலருக்கு படுகாயம் ...ஒரு மாணவன் திறமையாக ஒரு வாசலை திறந்து விட்டான் ...உடனே அதன் வழியாக அனைவரும் முண்டியடித்து அலறல் சத்தமுடன் வெளியே ஓடிவந்ததை ... ( என்னையும் சேர்த்து ) இன்னும் என்னால் மறக்க முடியவில்லை ...என்னுடைய நெருங்கிய நண்பன் , உடன் படித்தவன் ...அதிக உள்காயத்தால் ஒருவாரம் கல்லூரிக்கே வர முடியவில்லை. இன்று அவன் STATE BANK ல் , ஆந்திராவில் பணி செய்து , அவனும் VRS ல் வெளிவந்து விட்டான் . விஜயவாடாவில் வசிக்கிறான் குடும்பத்துடன் . வருடாவருடம் BUS DAY ம் கொண்டாடுவோம் ..அன்றும் . அதுமட்டுமல்ல ... பல நேரங்களில் வகுப்பு இல்லாத நேரத்திலும் ....வகுப்பு நேரத்தில் கட் அடித்துவிட்டு , கல்லூரி ஹாஸ்டலில் நாங்கள் அடிக்கும் லூட்டியை ... ஆகா ..... மறக்கமுடியுமா ... வாழ்நாள் வரை .

மதிப்பிற்குரிய பேராரிசிரியர் திரு SP சண்முகநாதன் அவர்கள் கல்லூரி முதல்வராக மிகசிறந்த முறையி பணியாற்றினார் . துணிவு மிக்கவர். மாணவர்களுக்கு என்றும் அதரவு அளித்தவர். ஒருநாள் மாணவர்கள் சாலையில் போகும் அரசு பேருந்துகளை கல்வீசி தாக்கியும் ஊழியர்களையும் அடித்து பஸ்ஸை தீயிட்டி கொளுத்தியும் விட்டனர். ஆனால் அந்த நிகழ்வில் மாணவர் மட்டுமன்றி சில சமூக விரோதிகளும் கலந்து கண்டு போர்க்களமாக செய்துவிட்டனர். சட்டம் ஒழுங்கு பிரச்சினை பெரிய சவாலாகி விட்ட்டது . அப்போது ( EMERGENCY )அறிவிக்கப்பட்ட காலம் வேறு . காவல்துறை அத்துமீறி நுழைந்து மாணவர்களை தாக்க ஆரம்பித்து விட்டனர்.ஹாஸ்டலில் உள்ள மாணவர்களையும் தாக்குதலுக்கு ஆளானார். இதனை கண்ட வெகுண்டேழுந்த , கல்லூரி முதல்வர் மிக கடுமையாக காவல்துறை உயர் அதிகாரிகளை சாடினார். என் அனுமதி இல்லாமல் , உள்ளே நுழைந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து , அதனை சென்னை மாநகர் காவல்துறைத் தலைவரிடம் மனு ஒன்று கொடுத்தும் விட்டார் .

வேறு பல நல்ல அனுபவங்களும் நடந்தேறியன .....ஒரு முறை கலைஞர் கருணாநிதி அவர்களை அழைத்து ' தமிழ் மன்றம் " துவக்கினோம் . கல்லூரி இறுதி நாளான அன்று நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் பாடிய ஒரு பாடலால் , " இரத்தத்திலகம் " படத்தின் சிவாஜியும் சாவித்திரியும் பாடும் , " பசுமை நிறைந்த நினைவுகளே .....என்ற வரிகள் பாடியதும் ......உடனே அத்தனை மாணவ கூட்டமும் தேம்பி அழத் தொடங்கிவிட்டனர். அதே பாடலைபலமுறை கேட்டும் மீண்டும் மீண்டும் பாடினார்கள் , அனைவரும் ஒரு குடும்பம் போல இருந்தோம் ... ஆனால் பிரிந்தே ஆக வேண்டும் என்ற நிலை என்பதலால் ஒருவரை ஒருவர் கட்டிப் பிடித்து அழுது தீர்த்தோம் ....அதுதான் உண்மை நட்பின் அடையாளம் , உணர்வுள்ள உள்ளங்களின் வெளிப்பாடு ....மேலும் பல அனுபவங்கள் உண்டு அங்கே ....

எத்தனை உறவுகள் இருந்தாலும் உலகில் ....நாம் நட்பு எனும் உறவை மறக்கவே முடியாது ....நண்பர்களிடம்தான் நம் உள்ளங்களை பகிர்ந்தும் கொள்கிறோம் ...உடனே உதவிடும் உயிர்களும் நண்பர்கள்தானே ...இன்றும் நம் கண்ணில் படாத பல நண்பர்கள் இருப்பினும் , மனதில் என்றும் நிலைத்தே இருப்பார்கள் ...இதனை நீங்கள் மறுக்கவே முடியாது ....

மீண்டும் சந்திக்கிறேன் ......


பழனி குமார்
25.07.2015

எழுதியவர் : பழனி குமார் (25-Jul-15, 9:25 am)
பார்வை : 275

சிறந்த கட்டுரைகள்

மேலே