திரைப்பட வாய்ப்புக்காக
ஏனுங்க உங்களுக்கு தமிழ் நாட்டலேயே நல்ல வேலையெல்லாம் கெடச்சும் பிடிவாதமா வடமாநிலங்களிலெ வேலை பாத்துட்டு பணி ஓய்விலே நம்ம மாநிலத்துக்கே வந்திட்டீங்க. உங்க பசங்களுக்குத் தமிழக் கத்துக் குடுக்காம இந்தி ஆங்கிலம் மராத்தி குஜராத்தி எல்லாம் சரளமாப் பேசறாங்க. ஆனா தமிழ்லெ ஒரு வாக்கியமகூடப் பேசத் தெரில. "இங்க வாங்க தம்பிகங்களா. உங்க பேரென்னனு" கேட்டா அதக்கூடப் புரிஞ்சுக்க முடியாம "கியா ஹை. கியா ஹை" ன்னு கிளிப்பிள்ள மாதிரி சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்லறாங்க. தமிழ்த் தெரியாமா இப்படியா பிள்ளைங்கள வளத்து வைக்கிறது? ஏதுக்குங்க அய்யா இது மாதிரி செஞ்சீங்க?
எல்லாம் சினிமா ஆசை தான். எங்கப்பா தியாகராஜ பாகவதரோட ரசிகரு. சினிமாவலே நடிக்க ஆசைப்பட்டாரே. அவருக்கு கர்நாடக சங்கீதம் தெரியாது வாய்ப்பு கெடைக்கல. நான் எம்.ஜி.ஆர் சிவாஜி காலத்து ஆளு அவங்க மாதிரி லட்சணமா அழகா இல்ல. எனக்கும் சினிமாவிலே நடிக்க வாய்ப்புக் கெடைக்கல. அது தான் எம்பசங்கள எப்பிடியாவது தமிழ் சினிமாவிலே நடிக்க வைக்கணுங்கற வெறியோட அவுங்களுக்குத் தமிழே தெரியக் கூடாதுன்னு அவுங்கள வட மாநிலங்களில் வச்சு வளத்தேன்.
அதுக்கும் தமிழ் சினிமாவிலெ நடிக்கறதுக்கும் என்ன சம்பநதம்?
வில்லன் கதாநாயகன் பின்னணி பாட எல்லாத்துக்கும் தமிழரல்லாதவரைத் தானே இங்க இறக்குமதி செய்யறாங்க. கேவலம் பாரதியார் வேடத்திலே நடிக்கறதுக்குக்கூட இறக்குமதி. அதனால எம் பசங்கள வடக்கே வச்சு வளத்தேன். இங்கே மொழி தெரியாதவங்களுக்கும் தமிழத் தப்புத் தப்பாப பேசிக் கடிச்சுக் கொதறித் துப்பறவங்களுக்குத் தானே ராஜ மரிதை, 5 ஸ்டார் அந்தஸ்தெல்லாம் கெடைக்கும். இப்பப் பாரு தமிழ் கடுகளவும் தெரியாத எம்பசஙகள 2 வருஷத்திலே தமிழ் ரசிகப் பெருமக்களின் இதய தெய்வஙகள் ஆக்கப்போறேன்.
வாழ்த்துக்கள். உங்க பசங்களுக்குத் தமிழ் சினிமாவலே நடிக்க எல்லாத் தகுதியும் இருக்கு.