பிரியும் நட்பு தரும் வலி
பிரியும் வேதனை நீ அறிவாயோ
அறிந்திருந்தால் நீ பிரிந்திருப்பாயோ
சொல் நட்பே
உன் அருமை நான் உணர்ந்தனே
என் அருமை உணர நீ மறந்தாயோ
சொல் நட்பே
காதல் பிரிவை
வளரும் தாடியில் மறைப்பேன்
உன் நட்பு
அது பிரிந்தபொழுது
தந்த வேதனையை
எதில் மறைப்பேன்
சொல் நட்பே
நான் வாழ்வில் தோற்று நின்ற பொழுது
என் வாழ்வின் ஒளியாய் வந்தாய்
உன்னை சூரியன் என்றே நினைத்தேன்
அதினால்தானோ
தோன்றி பின் மறைந்தாய்
சொல் நட்பே
மீண்டும் என் முன் தோன்றும்வரை
காத்திருப்பேன்
என் நட்பே