விவசாயம்
சிதைந்து
கொண்டிருக்கும்
நம் நாட்டின்
முதுகெலும்பை
சீர்படுத்த
தேடுகின்றோம்
இயற்கை எனும்
காவலனை
சீக்கிரமாய்
கண்டறிந்தால் சொர்க்கமது
நாளை நமக்கு...
இல்லையெனில்
இருக்கிறது
நரகத்தில் இடம் நமக்கு...
சொர்க்கம் என்றும்
நரகம் என்றும் சொல்லுவது
வேறு ஒரு உலகமில்லை...
நாம் வாழும் பூமியது....!!!