குள்ள வாத்து நீந்தும்

குளத்தில் மலர்ந்த அல்லி யருகே
***குள்ள வாத்து நீந்தும் !
பிளந்த அலகில் இரையைப் பற்றி
***பிள்ளை கட்கு ஊட்டும் !
வளர்ந்த மரத்தின் பூக்கள் கொட்டி
***வண்ண மெத்தை போடும் !
களங்க மில்லா ஆட்டுக் குட்டி
***கண்ணை மூடித் தூங்கும் !

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (25-Jul-15, 9:40 pm)
பார்வை : 638

மேலே