தோழி

என்ன தவறு செய்தேன் என்று தெரியவில்லை
நீ ஏன் என்னை பிரிந்தாய் என்று தெரியவில்லை ..

அடியே தோழி கொஞ்சம் உன் காதை கொடு
செவி கொடுக்காமல் என் மனதில் தராதே வடு

உன்னிடம் சிறிதுளி மணி கேட்டேன் பேச மறுத்தாய்
அதானால் நீ என்னை விடாமல் தனிமையில் பேசவைத்து கொண்டிருக்கிறாய் தினமும் ..

உன்னிடம் பேசுவதற்காக ஏன் என்று தெரியாமல் கூட மன்னிப்பு கேட்டேன் பலமுறை
அதை ஏற்கவும் மறுத்தாய் ..

உன் குரல் கேட்க துடித்தேன்
ஆனால் நீ நம் நட்பின் குரல்வளையை பிடித்தாய்

எழுதியவர் : முத்தையா (25-Jul-15, 10:46 pm)
சேர்த்தது : முத்தையா
Tanglish : thozhi
பார்வை : 413

மேலே