ஈன பிறவியே முடிந்தால் மாறிடு இல்லையேல் மடிந்திடு

காமுகனே...!!!

உனக்குள் ஏற்பட்ட வெறியினை தீர்த்திட
மான் போன்ற பெண்ணினை வதைகின்றாயே
அவள் அங்கங்களில் உன் உறவுகள் தெரியவில்லையா உனக்கு

பச்சிளம் குழந்தையாய் நீ இருக்க
உன் தாய் தன் மார்பினில் பால் தந்தாலே
அதை வேறு பெண்ணிடம் காண துடிக்கிறாய்
அவளும் உனக்கொரு தாய் போல தானே

விடலை பருவத்தில் உன்னை துணையாய் எண்ணி
உன் தங்கை உன் கை பற்றி நடந்திருப்பாளே
இந்த பெண்ணின் கைகளை நீ
வலிமை கொண்டு அடக்கையில் மறந்தாயோ
அவளும் உனக்கொரு தங்கை போல தானே

உனக்கொரு மகள் நாளை பிறப்பாள்
அப்பா என்று சொல்லி உன்னை அணைப்பாள்
என் மகளே என்று சொல்லி ஆனந்தம் கொள்வாயே
இன்று இவள் உடலை உரச துடிக்கும் உனக்கு
புரியவில்லையா... இவளும் உனக்கொரு மகள் தானே

ஈன பிறவியே !!!
முடிந்தால் மாறிடு இல்லையேல் மடிந்திடு

மறுத்து நீயும் உயிர் வாழ்ந்தால்
உன் தாயின் முன் நீ தலை தாழ்த்துவாய்
உன் தங்கை முன் கை இழந்த ஊனமாவாய்
உன் மகள் முன் நிற்க உடல் கூசுவாய்...!!!

எழுதியவர் : தண்டபாணி @ கவிபாலன் (26-Jul-15, 12:02 am)
பார்வை : 69

மேலே