கலாசார கேடு

அனுதினமும் அரைகுறை ஆடைகள்
வீதிகளில் வளம் வருகின்றன -
நாகரீகம் ..............

ஆண்கள் பெண்களாய்
பெண்கள் ஆண்களாய் .........

கண்ணகி வாழ்ந்த நாட்டில்
கலாசார சீர்கேடு -
சுதந்திரமாய் விபச்சாரம் ............

விளக்கேந்தவேண்டிய கைகளில்
விபரீதம் - மதுகோப்பை..............

வெக்கம் நாணம் நாடுகடத்தப்பட்டு
நாட்கள் வெகுவாகின்றன-
வேதனையில் பெண்மை ........

மகப்பேறை மிஞ்சும் கருக்கலைப்பு -
கண்காட்சி கல்யாணங்கள் ..........

மணமக்களை மணமகன்கள் மிஞ்சுகிறார்கள்
தற்கொலையில் ...........

வரதட்சணைக்கு ஆசைப்பட்டு
வாழ்க்கையை தொலைக்கிறான் இளைஞன்-
பேராசை ........

வாசல் தாண்டாதவள்
வழக்கிற்கு அழைக்கிறாள் - ஜீவனாம்சம்

தாலிகள் அடிக்கடி கழட்டப்படுகின்ற
அத்தியாவசியத்தில் அரசியல் ..........

கட்டுபாடுகளை கண்டுகொள்வதில்லை
கலாசார கேடு .............

கவிஞர் சுந்தர வினாயகமுருகன்

எழுதியவர் : வினாயகமுருகன் (27-Jul-15, 10:07 am)
சேர்த்தது : VINAYAGAMURUGAN
Tanglish : kalaachara ketu
பார்வை : 103

மேலே