உனக்கு அவ்ளோ பிரியமா
மனைவி:- என்னங்க! இனி உங்க கம்பெனில இருந்து இரவு வெளியே தங்கற மாதிரி வேலை கொடுத்தாங்கன்னா மாட்டேன்னு சொல்லிடுங்க...! நீங்க இல்லாம என்னால நிம்மதியா தூங்க முடியலீங்க!
கணவன்:- அடிக்கள்ளி! என் மேல உனக்கு அவ்ளோ பிரியமா..?
மனைவி:- அட அதுக்கில்லீங்க! தினமும் உங்களோட புலி உறுமற மாதிரியான குறட்டை சத்தத்தைக் கேட்டு தூங்கி பழகிட்டதனால நீங்க இல்லாம தூக்கமே வரமேட்டேங்குது! சில நாட்கள்ல டிவில "அனிமல் பிளானட்" போட்டு சமாளிச்சுக்கறேன்... பவர் கட்டுனா அது கூட முடியலீங்க... அதான்!
கணவன்:-?🙏?🙏?🙏?🙏?🙏?🙏?🙏?🙏?