எந்த அவமானமும்

அசிங்கப்படுவதில்
எந்த அவமானமும் எனக்கில்லை

ஏனெனில்
என் சமூகமின்னும் எழுந்திருக்கவேயில்லை

குடுவைகளில்
கண்ணீரும் குருதியுமாக
கலந்திங்கே
நிரப்பப்பட்டிருக்க

தேவையில்லா
சாதியத்தை
திணிக்கும் மிருகங்கள்
என் முன்னால்
எழுந்திங்கே
நடக்கையில்

நாதியற்ற என்சமூகம்
நடுத்தெருவில்
நாற்றத்தில் வீசிவிட்டார்கள்

எனதசிங்கம்
இதற்கு முன்னால்
மிகச் சிறியதே
மீண்டெழ துடிக்கும்
மனிதமெனும்
புதியவிதை
முளைத்தெழும்
வரையில்

படும் அசிங்கங்கள்
அவமானமாக
எண்ணுதலென்பது
எனக்கான
இழுக்கன்றோ

எழுந்திரு என்
சமூகமே
சாதிக்க பிறந்தநாம்
சாதி பார்த்து
சமூகத்தை
சீரழிக்க
ஒரு போதும்
இடம்கொடுக்கலாமா

எழுந்திரு
என் சமூகமே,,,

எழுதியவர் : அரும்பிதழ் சே (27-Jul-15, 3:31 pm)
பார்வை : 78

மேலே