உயிர்கள் ஒன்றே
ஒரு தோலும் சதையும்
சாதாரணம் தான்
ஒரு கறிகடையில்
தொங்கும்போது.!
அதே.! தோலும் சதையும்
அதிர்ச்சி தான் சாலையில்
சிதறிக்கிடக்கும் போது.!
ஒரு மாமிசத்தின் துடிப்பு
மகிழ்ச்சி தான் நம் வீட்டு
பாத்திரத்தில் கொதிக்கும்போது
அதே! மாமிசத்தின் துடிப்பு
வேதனை தான் நம் வீட்டு
படுக்கையில் கிடக்கும்போது
ஒரு கொலை என்பது
அமைதியான ஒன்று தான்
ஐந்திற்கு நடக்கும்போது.!
அதே.! கொலை அநியாயமான
ஒன்று தான் ஐந்தோடு ஒன்று
கூடும்போது.!
எல்லா உயிர்களும்
ஒன்று தான் நம்
வார்த்தைகளில் மட்டும்.!
உயிர்க்கொலை
பாவம் தான்
அதன் சுவை நம்
நாவில் படாதவரை..!