ஏன் மறந்து போனோம்

ஒவ்வொரு அடியாக
நம் பாதம் தொடும்
பாதைகளின் அச்சு
மண்ணளவை
அளந்தவர்கள் இங்கே
ஏராளம்

ஏன் மறந்து போனோம்
ஒத்தையடி
பாதையில்
ஒத்துப்போகிறதா
நம் காலடி தடமென
தேடிப்பிடித்து
தெனாவட்டாய்
நடைபோடும்
சின்னஞ்சிறுசுகளின்
இதயத்தில்
வாழ விடுங்களேன்
அழியாத
நினைவுகளாய்

ஏன் மறந்து போனோம்
ஏர்பிடித்து உழுதோரின்
உள்ளங்கை பிடியில்
நழுவி
சேற்றுப்புழுதி யிலோடும்
மிச்சத் தண்ணீரின்
நடுவே பாலங்கட்டி
பயணப்பட்டோம்

ஏன் மறந்து போனோம்
பள்ளிக்கூட புத்தகப்பையானது
உச்சந் தலையில்
புதையுண்டு பெருச்சாலை
புதியதடம்
பதித்ததே

ஏன் மறந்துபோனோம்
எதுவும் மாறிடவில்லை
மனிதனைத் தவிர
கடந்து வந்த
பாதைகளை
நாமாகவே மறந்துபோனோம்

நினைவுகளில்
நிலைக்க மறுக்கிறதே
நிலையான
பாதையினை
நமக்களித்த
முன்னோரை
ஏன் மறந்து போனோம்!

எழுதியவர் : அரும்பிதழ் சே (28-Jul-15, 12:37 am)
சேர்த்தது : செ செந்தழல் சேது
Tanglish : aen maranthu ponom
பார்வை : 89

மேலே