அன்பை சிறைபிடிக்க வேண்டும்

எண்ணம் கரைதொடும்
முன்பே
காற்றிசையோடு
கரைந்தோடும் சின்னக்குருவிகளை
போல

சிறகு விரித்து சிங்காரமாய் அலங்காரம் கொண்டலைந்து
சுற்றித்திரிய ஆசை
மேனிச் சுடுகிறதே
மேகமது கீழிறங்க
மாட்டாயோ

கிண்ணத்தில்
ஆசைகள் வழிய
அருந்தும் ரட்சகன்
அன்பை விட்டுச்சென்றால் அளவோடு
இன்பத்தில் மூழ்கியிருக்கலாமே

ஒன்றுக்கும் உதவாத கோபத்தால்
உடல்செத்து உள்ளம்
நொந்து கொதிநீரில் குளிப்பதை விடவும்

கோபம் தவிர்த்து கோபுரத்தில் அன்பை உயர்த்திப் பாராய்
தோழனே என
அழகாய் சொன்ன
இயற்கை ரட்சகனோடு இன்ப உலா வந்தேன்

இவ்வுலகம் முழுதும்
சுவையினிக்க சூழ்ந்திருந்த இருளை அன்பாலே விரட்டியடித்தேன்
தாகம் தீரவில்லை
இன்னமும் தேடுகிறது
எங்கேனும்
அன்பிருந்தால்
உடனே சொல்லுங்கள் எனதிதயத்தில்
சிறைபிடிக்க
வேண்டும் அன்பெனும்
ஆழச்சுரபியை,,,

எழுதியவர் : அரும்பிதழ் சே (28-Jul-15, 12:41 am)
சேர்த்தது : செ செந்தழல் சேது
பார்வை : 94

மேலே