காலம் வென்ற கலாம்

வானுயர சிறகடித்த
அக்னி சிறகுகள்
இன்று
வையம் நீங்கியதே..

நாளிதழ் வீசிய
கரங்கள்
கண்ட கனவின் விளைவே
இன்று
கரங்களில் எல்லாம்
நாளிதழ்
கண்ணீருடன்,
காரணம்
உன் பிரிவே..


பாம்பன் பாலத்து
பாலகனே..
பள்ளி சிறார்களின்
நாயகனே..
மூத்த குடிமகனே..
அணு நாயகனே..
அமைதி பேரலையே..
இளைஞர்களின் எழுச்சியே
என்றும்
இறவாது உன் கனவுகளே..
காலத்தை வென்ற கலாமே..

இந்தியா - 2020
சமர்ப்பணம்
உன் திருவடிகளுக்கு..

எழுதியவர் : முருகேசன் சத்தியமூர்த்தி (28-Jul-15, 11:07 am)
பார்வை : 112

மேலே