அறிவு மேதை அப்துல் கலாம்

தேசத்தின் விஞ்ஞானம் இவர்
நேசம் கொண்ட மாமனிதர்

இராமேஸ்வரம் தந்த இந்த
மனிதன் ஒரு மாணிக்கம்

தொலை நோக்கு பார்வை
எளிமையான தோற்றம்

மாணக்களுக்கு அன்பை தந்து
ஆற்றலை வெளிப்படுத்தினார்

நாளைய வலிமையான பாரதம்
இளைய தலைமுறைகள் என்றார்

கற்கும் கல்வி ஒன்றே உங்கள்
(மாணவர்களின்) கனவு என்றார்

பாரத ரத்னா விருது தந்தது
மாமனிதனுக்கு வந்த கெளரவம்

“கனவு காணுங்கள்” என்றார்
இந்த ஏவுகணை நாயகன்

உயரிய 11 வது ஜனாதிபதி பதவி
அவருக்கு சூட்டிய மணிமகுடம்

தேசீய விருதுகள் இவரின்
சாதனைகளுக்கு தந்த போதனை

உலக நாடுகள் இவரின் ஆற்றலை
கௌரவித்தது தனிப் பெருமையாக

இந்தியா வல்லரசு நாடாக இவர்
கனவின் இலக்கு “2020”

இவர் வாழ்க்கை வரலாறுகளை
அக்னி சிறகுகள் ஆக படைத்தார்

இந்த பாரதத்திற்கு ஒரு பேரிழப்பு
இவரின் மறைவு ஒரு குறைதான்

மாமனிதனின் மறு வாழ்விற்கு
நாம் கூட்டாக துவா செய்வோம்

A.P.J அப்துல் கலாம் இவர்
அறிவுக்கு ஒரு சலாம் !

கவிஞர்: இறைநேசன்.

எழுதியவர் : கவிஞர்.இறைநேசன் (28-Jul-15, 11:01 am)
பார்வை : 409

மேலே