மீண்டும் உயிர்த்தெழுவார் அப்துல்கலாம்

அப்துல்கலாம்

கனவு என்பதன்
அர்த்தத்தை
அனைத்துமொழி அகராதியிலும்
மாற்றி வைத்தவர்...!

நாளைய விருட்சம்
இன்றைய விதை !
நாளைய இந்தியா
இன்றைய இளைஞன் !

நாள்தோறும் இதையே
மந்திரமாக உச்சரித்தவர்...!

விண் அறிவியலால்
ஆகாயத்தை வென்றவர்
அணு அறிவியலால்
அமெரிக்காவை வென்றவர்
எல்லாவற்றிக்கும் மேலாக
தன் ஆத்ம அறிவியலால்
இந்தியாவின் இதயத்தை வென்றவர்...!

அவர் தன் அறிவால்
அணுவை தட்டி வெடித்த போது
அதிர்ந்து போயிருக்கலாம் அமெரிக்கா
ஆனால்;
தன் உணர்வால்
இந்திய இளைஞர்களின்
இதயத்தைத் தட்டி
எழுப்பிய போதுதான்
அச்சம் கொண்டது
அமெரிக்கா ...!

ஏவுகணைக்கும் சரி
நம் கனவுக்கும் சரி
இலக்கை அடையும்
யுக்தியைக் கற்றுக்கொடுத்தவர்...!

தற்சமயம்
அவரிடம் கற்ற அறிவை
நாம் செயல்படுத்த...
அதை சற்றே தள்ளி நின்று
வேடிக்கை பார்க்கிறார்
அவ்வளவே...!

இளைஞனே வா!
ஆனந்த சிறகுகளை
உதிர்த்து விடு...
அக்னிச் சிறகுகளோடு
உயிர்த்து எழு !

இலக்கு 2020...!

இந்தியாவின் எதிர்காலம்
இளைஞர்கள் கையில்
வாக்கியத்தைத் தூக்கி எறிவோம்...!

இந்தியாவின் நிகழ்காலம்
இளைஞர்கள் கையில்
வாக்கியத்தைத் தூக்கி சுமப்போம்...!

வார்த்தையாக அல்லாமல்
வாழ்க்கையாக...

கனவு நனவாகும் போது
மீண்டும் உயிர்த்தெழுவார்...!
அப்துல்கலாம்....

எழுதியவர் : மலைமன்னன் (28-Jul-15, 11:25 am)
பார்வை : 367

சிறந்த கவிதைகள்

மேலே