விண்மீன்கள் அழைத்தனவோ
தென் தமிழ்க் கரையோரம்
வந்துதித்த களங்கமில்லாத்
தண் நிலவை, விண்மீன்கள்
அழைத்தனவோ தங்களுக்கும்
கொஞ்சம் ஞானச் சுடரேற்றுமாறு !
மறுக்க முடியாமல் அழைப்பை
ஏற்றீரோ? கர்மயோகியே !
உங்களுக்கே உரித்தான
சின்னத் தலையசைப்புடன் கூடிய
அழகுப் புன்னகையோடு ...!!
இடியென இறங்கிய
பிரிவுச் செய்தி கலங்கச் செய்தாலும் ,
இளம் நெஞ்சங்களில் நீங்கள் ஏற்றிய
தீபச்சுடர்களில், இத் தேசத்தின் மீதான
உங்கள் நேசமும் ,கனவுகளும்
என்றென்றும் உயிர்ப்புடன் வாழும் என்ற
நம்பிக்கையுடன் பிரியா விடை கொடுக்கிறோம்
ப்ரியமுடன் !