கனவு உருவாகும் நதி

கனவு உருவாகும் நதி நீ
நனவுகளின் நினைவு நீ
வளைவு வான வாழ்த்து நீ
கனவுக்கு கனம் கொடுத்தவன் நீ
குழந்தைகளின் குடும்பம் நீ
இளைஞர்களின் இதயம் நீ
அறிவியலின் உரம் நீ
உலகத்தின் வரம் நீ
நாகரிக நதிகளை
நவ நாகரிகமாய் இணைக்க முயன்றவன் நீ
அக்னி சிறகோடு பறந்தவன் நீ
இளைஞர் இதயங்களில்
இலட்சியம் ஏவியவன் நீ
உலகில் தோன்றிய வானவில் நீ
உன்..
உறுதிமொழி கொண்டுதானே
உறுதியாய் இருந்தோம் - உன்
இறுதி வழி திறக்க ..
எம் விழி நீர் சுரக்க
கண்ணீர் நதியோடு -உன்
கனவை ஏற்கிறோம்
சென்று வா.. நீ
உயிர்ப்பிக்கப்படத்தான் போகிறாய்
உனைக் கொண்ட மரணமும்
இனி கனவு காணப் படிக்கட்டும்
உன் உயிர் பூமி வர
அதுவே
உனக்குப் படி கட்டட்டும்

செ.பா.சிவராசன்

எழுதியவர் : செ.பா.சிவராசன் (28-Jul-15, 9:56 am)
பார்வை : 123

மேலே