கனவிருக்கும் வரை கலாம்

...........................................................................................................................................................................................

வாட்டிடும் லஞ்சப் பணத்தில் என்
வசதிகள் பெருக வேண்டாம்
ஓட்டிடும் ஊழல் வழியில்
எனக்கென்றும் உயர்வு வேண்டாம்- என்று
இளைஞர்கள் மறுத்தால் நீளுமோ கரங்கள்?
இளைஞர்கள் அன்றோ இந்தியாவின் வரங்கள்?
முதல் குடிமகனாரின் முத்து வார்த்தைகள் இவை..!

இளைஞர்களை நம்பிய பேரிளம் பெரியவர்
இன்றில்லை..!
விண்ணகம் சென்றது எம்
தந்தையென சிந்தை தளர்கிறோம்..!

முதல் பார்வையில்
இவரிடம் என்ன
என்று தோன்றும்..!
முடித்துக் கிளம்புகையில்
இவர்தான்...! இவர்தான்...! என்று மனம் பின்னோடும்..

உச்சம் தொட்டவர்..
ஒழுக்கத்திலும் உயர்விலும்..!
உச்சம் தொட்டது..
அறிவியலும் தமிழும்..!

காலம் வேலையைக் காட்டினாலும்
கனவிருக்கும் வரை கலாம் இருப்பார்..!

எழுதியவர் : அருணை ஜெயசீலி (28-Jul-15, 1:03 pm)
பார்வை : 1214

மேலே