கண்ணீர் கடலில் கலாம் முத்து-2

ஆழ்கடல் தந்த முத்தே!
இத்தேசத்தின் சொத்தே!
தலைமத்துவத்தின் கேடயமே!
தன்னலமற்ற தலைவனே!
கற்பவர்களின் கலங்கறையே!
இளைஞர்களின் இமையமே!
உனக்கா மரணம்? ??
கடற்கரை மண்ணில் பாதம் படிந்து
தளர்நடை போட்ட உமக்கு
உலகப் பெரும்பகுதியில் பயணம் இலகுவானதோ.
முகவை மாவட்டம்
கடல் சூழ்ந்த இராமேஸ்வரம்
ஜைனுலாபுதின் ஆஷியம்மாளின் வம்சம் நீர்.
கருக்கொண்ட உன்னை
கருத்தரித்த பின்னே என்ன நினைத்தனறோ
உம் பெற்றோர்.?
படகோட்டி என்றா?
பஞ்சம் போக்குவாய் என்றா?
மீன் பிடிப்பாய் என்றா?
கடலுக்கு போவாய் என்றா?
கஷ்டம் துடைப்பாய் என்றா?
கற்பாய் என்றா?
கல்லாய் என்றா?
படிப்பாயா என்றா?
பட்டம் பெறுவாய் என்றா?
விந்தை புரிவாய் என்றா?
விஞ்ஞாணம் புரிவாயென்றா?
வின்னையும் தொடுவாயென்றா?
குடிசையில் பிறந்தாயே என்றா?
குடியரசு தலைவரென்றா?
என்ன தான் நினைத்து வளர்த்தார் உம்மை.
ஓய்வின்றி பயணிக்கும் கடலலைதான் சோராது
உழைத்த உன் ஆசானோ?
வறண்ட வாழ்வாதாரம் நலிந்த குடும்ப சூழல் உன்னை சிறை பிடித்தும்
நீ சிகரம் தொட்டாய்
இந்தியனாய் தனி சரித்திரம் வகுத்தாய்.
முற்காலத்தித்தில் சுவார்ட்ஸ் வளாகத்தில்
வளர்த்த ஆலமரம் விழுதுஅடர்ந்தார் போல்
இப்பாரினில்
உம்புகழ் பரந்து விரிந்தது சிறப்பு.
பொருள் விற்று பேப்பர் இட்டு
கால் வயிறு அறைவயிறாய்
கடன் பெற்று கல்லூரி சென்று
கருத்தாய் கற்று தடை அகற்றி தடம்பதித்து
விஞ்ஞாண குடும்பத்தில் வித்தகனானாய்
உழைத்து உழைத்து நிலைத்துவிட்டாய்
நிலையில்லா இவ்வுலக சாசணத்தில்.
சாதி யை வெறுத்தாய்
மதத்திற்கு மனிதம் கற்பித்தாய்
உம் புண்ணகையில் சிறைபிடித்தாய்
கனிந்த குறளில் கற்பித்தாய்
கல்விசாலைக்கு படையெடுத்தாய்
மாணவ ஞாணிகளை தெரிந்தெடுத்தாய்
வல்லரசுக்கு வழிவகுத்தாய் குடியரசின் தலைவனானாய் .
முகவையின் முகவரி மரணம்
இனி யார் உங்களுக்கு நிகர் ஜனனம்
------------------------------------------------------------------------------------------------------
அய்யாவுக்கு எங்கள் இதயம் கனிந்த கண்ணீர் அஞ்சலி