எங்கள் கனவுகளின் தந்தை
நம் நாட்டில்
நீர் கால் பதித்திடாத இடங்கள் உண்டோ
நீர் கொண்டிராத கதாபாத்திரங்கள் உண்டோ
இவ்வுலகில்
உம்மை வெறுக்கும் மனிதர்கள் தான் உண்டோ
அனுப்பிய ஏவுகணைகள் பல
எழுதிய புத்தகங்கள் பல
சந்தித்த மாணவச் செல்வங்கள் பல
கொடுத்த சொற்பொழிவுகள் பல
வாங்கிய விருதுகள் பல
சம்பாதித்த அன்பு உள்ளங்கள் பல
இவைகள் தானோ
உம் வாழ்வில் நீர் சம்பாதித்த சொத்துகளின் மதிப்பு
எளிமையின் முழு உருவே
நீர் எடுத்ததோ பல உருவே
வாழும் பொழுது
கறைபடாது கௌரவமாய் வாழ்ந்த நீர்
மரித்த பிறகும் எங்கள் மனதில் கரையாமல் வாழ்வீர்
உம் சுயசரிதை கண்டு
விக்கிபீடியாவே விக்கி நின்றது
என்றால் மிகையாகாது
நீர் மரித்தாலும்
நீர் கொளுத்தி விட்ட அக்னி
சிறகடித்து பறந்துகொண்டே தான் இருக்கும்
என்றும் எங்கள் உள்ளில்