காதல் வந்தால் மாறிவிடும்
தாகத்தோடு வெள்ளாடு
தலை மாட்டிகொண்டது போல்
வேகத்தோடு வந்தகாதல்
விட்டுவிட சொல்லி கேட்கறது
என்னதான் கத்தினாலும்
எதிரொலிக்கும் குடத்துக்குள்ளே
என்னை நீ சுத்தினாலும்
இப்படிதான் நடக்குமுன்னு
அப்போ நான் சொல்லியிருந்தேன்
இப்போ அகப்பட்டது நான் அல்லவா ?