உன்னோடு இரவுகள்

காதல் சுகம் கண்டுவிட்டா
சொர்க்க சுகம் தோத்துவிடும்

முத்த சுகம் கண்டுவிட்டா
செத்த தேகம் பிறந்துவிடும்

நாண பார்வை நிலவுக்குத்தான்
வான முழுக்க சிவந்துவிடும்

வெள்ளி முளைக்கும் வேளையிலும்
துள்ளிக்குதிக்கும் கனவுகளில்

அள்ளிகொல்வேன் என்னவளே
சொல்லி முடிக்க வழியுமில்லே


எழுதியவர் : . ' .கவி (19-May-11, 9:51 am)
சேர்த்தது : A.Rajthilak
Tanglish : unnodu iravugal
பார்வை : 359

மேலே