இறைவா, உன் காதுகளில் விழுகிறதா

இறைவா,

விண்வெளிக்காய்
விதைத்த விதை
விண்ணுலகம் சென்ற
மாயம் என்னவோ?

அணு ஆராய்ச்சிக்காய்
அனுப்பப்பட்ட அணு மெய்ஞானி
ஆழ் தூக்கம் சென்ற
மாயம் என்னவோ?

ஒரு வேளை,

உன் ஆய்வுக்கூடத்தில்
அணு ஆராய்ச்சிக்காய்
கூட்டிசென்றாயோ?

ஏழாம் உலகத்தில்
ஏவுகணைச் சோதனை
நடத்துகிறாயோ?

இன்னும் கொஞ்சம்
காலம் கலாமை
எங்களுக்காய் விட்டு
வைத்திருக்கலாமே...!!!

எங்களின்
இந்தியாவை
வல்லரசாக்கி
இருப்பாரே...!!!

எளிமையும்
நற்பண்பும்
உண்மையும்
நேர்மையும்
உழைப்பும்
கொண்டவர்
நீண்ட நாள் வாழ்வது பிடிக்கவில்லையா?

உனக்கேன் இந்த அவசரம்?

இறைவா,
உன் காதுகளில் விழுகிறதா??

இன்று ஒட்டு மொத்த
உலகமும்
உன்னை கரித்து கொட்டுகிறதே...!!!???

அங்காவது
அவரை
பாதுகாப்பாக வைத்துக்கொள்...!!!

இங்கே நாங்கள்
தொலைத்துவிட்டோம்...!!!


-சகா

எழுதியவர் : சகா (சலீம் கான்) (29-Jul-15, 10:45 pm)
சேர்த்தது : சகா சலீம் கான்
பார்வை : 568

மேலே