அறிவைப் போற்று அழகுக்கு முன்
நிலைஅழியும் உடலின்
நிலையில்லா அழகை
நினைத்து நித்தம்
நித்தம் வாடும்
நிலையில்லா மாந்தர்தம்
நிலையான பேரறிவை
நினைந்து அதனை
நிலைபெறச் செய்ய
நிலையான முயற்சியினை
நிலையாய் செய்ய
நினைக்க மற(று)ப்பது
விந்தையிலும் விந்தை!