நான் ஒரு பைத்தியக்காரன்
![](https://eluthu.com/images/loading.gif)
ஆழ்ந்த அந்தியில்
தனிமையின் சாரம்
வேண்டி சாலையில்
நடப்பவன்.
சலனமில்லா கடலின்
ஆர்ப்பட்டமான அலையின்
பரிபாஷைகளை கேட்டு
ரசிப்பவன்.
பேச்சின் எதிர்பதத்தில்
தீராக் காதல்
ஆதலினால் திவிரமாய்
அனுசரிப்பவன்.
இல்லாத கடவுளை
இருக்கின்றவர்கள் மத்தியில்
இல்லை எனச்
சொல்பவன்.
பெண்னை நேசித்தாலும்
அவளை மோகிப்பதில்
ஏனோ விருப்பம்
இல்லாதவன்.
தலைப்பின் அர்த்தம்
புரிகிறதா? வெகுமக்கள்
இதைத் தான்
சொல்கிறார்கள்!
வெகுமக்கள் சொல்வதை
ஏற்கலாமா? அதுதானே
உலக வழக்கம்
என்கிறீர்களா?
விடை தெரிந்த
இக்கேள்விக் கணைகளோடு
விடை பகரா
நான்!