நம்பிக்கையில்லா நம்பிக்கைகள்

தன் எதிர்காலம் சிறைபட்டு
சிறகொடிந்த பறவை ஒன்று
என் எதிர்காலத்தை தீர்மானிக்கிறது.!

- கிளி சோதிடம்

@@@@@$$$$$@@@@$$$$@@@@$$$$@

நான் போடும் அரிசியே
அடுத்தவேளை ஆகாரம்
எனும் போது.! இவன்
பரிகாரம் செய்கிறான் என்
வாழ்க்கை செழிப்படைய.??

-குடுகுடுப்பை காரன்

@@@@$$$$$@@@@$$$@@@@$$$$@@@

மண்ணில் உள்ள கூட்டங்களின்
எதிர்ப்பை தாண்டி திருமணம்
சென்ற காதல் ஒன்று விண்ணில்
உள்ள கூட்டத்தால் பிரிந்து
போகிறது.!!

-ஜாதகம்(கிரகங்கள்)

@@@@#$###@@@@@$$$$$@@@@$$$$$@

பிறர்குடி கெடுக்கும் தொழிலுக்கு
கடவுளையே கூட்டு சேர்த்து
கொள்கிறான் இவன்.!!

-மாந்திரீகன்

@@@@@$$$$@@@@$$$$@@@@@$$$$

இன்பம் துன்பம் எனும் இருபக்க
வாழ்க்கை நாணயத்தை
சுண்டி, யூகிக்க முடியாத
முடிவை சொல்கிறதாம் இது.!!

-சோலி

@@@####@@@@@$$$$$@@@@$$$$$@@

எழுதியவர் : பார்த்திப மணி (30-Jul-15, 1:09 pm)
பார்வை : 230

மேலே