மனிதனிதன் மீள் பயணம்
நாலு கால் மிருகமாக நடைபழகி
நாளடைவில் மாற்றம் கொண்டான் மனிதனாக
இரண்டு காலால் எழுந்து நடந்து
இவ்வுலகை சுற்றி வலமும் வந்தான்
இரவு பகல் இரண்டை தவிர
இயற்க்கை எல்லாம் மாற்றி வைத்தான்
மதச் சாயம் ஜாதிச் சாயம்
மனிதன் தன்னில் பூசிக் கொண்டான்
மதுவின் மடியில் புகையின் பிடியில்
மரணம் வரை மயங்கி திளைக்கிறான்
பொறாமைப் பேய்களை பிடித்து வந்து
புத்தியில் அவனும் பூட்டிக் கொண்டான்
வஞ்சக எண்ணம் வளர்த்துக் கொண்டான்
வந்த வழியும் மறந்து விட்டான்
இதயம் என்பதை தொலைத்து விட்டான்
இரக்கம் என்பதை மறந்து விட்டான்
மீள் பயணமாக மீண்டும் இதோ
மிருகமாகிறான் மனிதன் இங்கே