விஞ்ஞானியைவிட கவிஞனே கட்டிக்காரன்

விஞ்ஞானியைவிட
கவிஞனே கட்டிக்காரன் !!!

மேகம் உருகினால் மழை
என்றான் விஞ்ஞானி
மேகத்தை நெய்தால் மெத்தை
என்றான் கவிஞன் !!!

சூரியன் சுட்டெரிக்கும்
நெருப்புக்கோளம்
என்றான் விஞ்ஞானி !!!
என்வீட்டில் விறகில்லை
சூரியனிலிருந்து நெருப்பை
சுரண்டிக்கொள்கிறேன்
என்றான் கவிஞன் !!!

சூரியனுக்கு பக்கத்தில்
போனால் பஷ்பமாகிவிடுவோம்
என்றான் விஞ்ஞானி !!
போட பைத்தியக்காரா
கன்னியின் பார்வையில்
சூரியன் பஷ்பமாகிடும்
என்றான் கவிஞன் !!!...

நிலவில் கால்பதித்தேன்
என்று மெச்சிக்கொண்டான்
விஞ்ஞானி !!!
நிலவை வீட்டுக்கு அழைத்து
விருந்து வைத்தான்
கவிஞன் !!!

நட்சத்திரங்களை நுண்ணோக்கியால்
பார்த்து எண்ணிக்கொண்டிருந்தான்
விஞ்ஞானி !!!
கோடி நட்சத்திரங்களை
தன் நுனிவிரல் வழியே
கொட்டிக் குவித்தான்
கவிஞன் !!!

செவ்வாய் கிரகத்தில்
மனிதன் வாழமுடியுமா
என்று ஆராய்ச்சிகொண்டான்
விஞ்ஞானி !!!
அவள் செவ்வாயிலயே
வாழ்ந்துவிடலாம் என்று
ஆராய்ச்சிக்கு முடிவுகட்டினான்
கவிஞன் !!!

அணுவை உடைத்தால்
ஆற்றல் கிடைக்கும்
என்றான் விஞ்ஞானி !!!
அனு உடைந்தால்
அவனுக்குள் அணுகுண்டுவெடிக்கும்
என்றான் கவிஞன் !!!

விஞ்ஞானியின் பருப்பொருளை
கவிஞன் கருப்பொருளாக எடுத்தான்
கவிஞ்ஞனின் கற்பனையை
விஞ்ஞானியின் நுந்நோக்கியால்கூட
பார்க்க முடியவில்லை !!!

விஞ்ஞானி
நீரில் மின்சாரத்தை
கண்டுபிடித்தான்
காற்றில் மின்சாரத்தை
கண்டுபிடித்தான
நெருப்பில் மின்சாரத்தை
கண்டுபிடித்தான் !!!

கவிஞன் மின்சாரத்தின்
நிறத்தை கண்டுபிடித்தான்
அவளது பார்வையில் !!!

கருப்பை இல்லாமல்
குழந்தை பிறக்கும்
என்று கண்டுசொன்னான்
விஞ்ஞானி !!
அவள் பார்வைவில்
பிறந்த குழந்தைதான்
இது என்று தன்கவிதையை
நீட்டினான் !!!
கைக்குழந்தை சிரித்தது !!

விஞ்ஞானி கைபேசியை
கண்டுபிடித்தான் !!
கன்னியின் மனதை
கண்டு பிடித்தான்
கவிஞன் !!

இறந்தும் இருப்பதை
கூந்தல் என கண்டுசொன்னான்
விஞ்ஞானி !!!
நான் இன்னும் இருப்பதே
அவளின் ஒற்றை கற்றைமுடி
என்னுடன் இருப்பதால்தான்
என்றான் கவிஞன் !!

தொலைக்காட்சிப் பெட்டியைக்
கண்டுபிடித்தான் விஞ்ஞானி !!
தொலைந்துபோன காட்சிகளை
கண்முன்னே கொண்டுவந்தான் !!
கவிஞன் !!

ஆப்பிள் விழுந்தது
புவி ஈர்ப்புவிசை
கண்டுபிடித்தான் விஞ்ஞானி !!
அந்த நாட்டில்
ஆப்பிள்மரம் அதிகம்
அதனால் அது நடந்தது
என்றான் கவிஞன் !!!

ஓசோனில் ஓட்டையென
ஓலம்போட்டான் விஞ்ஞானி !!
ஓட்டையை அடைக்க
சூரியனுக்கு ஓலை
அனுப்பினான் கவிஞன் !!!

பெண்ணின் மார்பு
கொழுப்புத் திரள் நிறைந்தது
என்றான் விஞ்ஞானி !!
பெண்ணின் மார்பு
அமுத சுரபி நிறைந்தது
என்றான் கவிஞன் !!!

கனவு காணுங்கள்
என்றான் ஒரு விஞ்ஞானி !!

கற்பனையில் கறைந்திடுங்கள்
என்றான் ஒரு கவிஞன் !!!

விஞ்ஞானியின் படைப்பு
அழிவிற்கு !!
கவிஞனின் படைப்பு
ஆக்கத்திற்கு !!!

எழுதியவர் : கொட்ரூம் (30-Jul-15, 2:32 pm)
சேர்த்தது : கொட்ட்ரூம்
பார்வை : 105

மேலே