வைரமுத்து

வைரமுத்து
உன்னை பெற்றவர்கள்
பொறுத்தமாய்தான்
பெயர் வைத்துள்ளார்கள்
வைரத்தை வார்த்தைகளிலும்
முத்துக்களை வரிகளிலும் கோர்த்துவிடுகிறாய்

புதுக்கவிதையின் புத்திரன் பாரதியென்றால்
விஞ்ஞானக் கவிதையின் வித்தகன் நீ
புதுக்கவிதை சற்று தடுமாற
தாங்கி நிற்க நீ கண்டுபிடித்தாயே ஒரு கண்டுபிடிப்பு
அது
விஞ்ஞானிகளையும் விஞ்சியது

யாரும் தொடத ஒன்றை தொட்டாய்
சிகரத்தை நீ தொட்டாய்

நீ தொடாத உவமையை தேடித் தினமும் தோய்ந்து போகிறேன்
தேய்ந்து போகிறேன்

மண்ணில் நீ கால்வைத்து விண்ணை நீ தொடுகின்றாய்
அடுத்த கணமே வெள்ளிக்கோளத்தை முழுங்கிவிடுகிறாய்

செவ்வாயில் கால்வைத்து
புளூட்டோவை புரட்டிப்போடுகிறாய்
சனியை துணியால்கட்டி துணிந்து அடிக்கிறாய்
சரிந்து விழுகிறது சூரியன்

நீ சுழட்டிய சுழட்டில் அத்தனை கோள்களும்
அந்தர் பல்டி அடிக்கிறது
விடுவதாய் இல்லை நீ
பால்வெளியை பாலாய்க்கடைந்து
பால்கோவாக்க முயல்கிறாய்

எத்தனை அசாத்திய
விருட்சம் உன் கற்பனை
உன் கற்பனையில் கல்லைக் கறைத்து
கருவாட்டுப்பானை செய்கிறாய்
கருவாட்டுப் பானையுடைத்து கப்பல் செல்கிறாய்
கப்பலை உடைத்து காது குடைகிறாய்
மேகத்தை பஞ்சுமெத்தை ஆக்குகிறாய்
மின்னலைப் பிடித்து
தாம்பூலம் கட்டுகிறாய்
காயை கனிய வைக்கிறாய்
கனியை காயாக்குகிறாய்

அன்று கண்ணதாசனை பார்த்து நீ சொன்னாய் அவர் சூரியன்
நானோ தண்ணீரில் இருக்கும் தாமரை
என்று

நான் சொல்கிறேன்
உன்னைப்பார்த்து
நீ தூரமாய் இருக்கும்
துருவ நட்சத்திரம்
உனை நுன்னோக்கி வழிகாணும் பார்வைவற்றியவன் நான்

தமிழ்நாட்டில் இருக்கும் ஒவ்வொரு பெண்ணின் உதடுகளில் அவள் காதலன் பேசிய வார்த்தை உதிக்கிறதோ இல்லையோ
உன்வார்த்தை தெரிக்கிறது
அது தவிக்கிறது

பாரதிக்குப்பின் கண்ணதாசன் இருபதாம் நூற்றாண்டை தமிழை தளிர்க்க வைத்தார்
நீ இருப்பத்தியொன்றாம்
நூற்றாண்டில் துளிர்க்க வைக்கிறாய்
துள்ளவைக்கிறாய்

குண்டுச் சட்டிக்குள் குதிரை ஓட்டாதீர்களென்று
மேற்கத்திய இசையில் தமிழை புகுத்தி
புது விஞ்ஞானம்
காண்கிறாய்

நீ ஒரு கவிஞ்ன்
நீ ஒரு விஞ்ஞானி
நீ ஒரு மெய்ஞானி
தமிழ்த்தாயின் தவப்பிள்ளை

உமது தமிழ்தொண்டு தொடர
தொன்னிலமாம் எம்தென்னிலம் நோக்கி தென்குமரியை
வணங்குகிறேன் இருப்த்தியொன்றாம் நூற்றாண்டை நிறைவுசெய்து
இருபத்திரெண்டாம் நூற்றாண்டில்
மீண்டும் தமிழ்மண்ணில் பிறக்க வைக்கவேண்டுமென்று

எழுதியவர் : கொட்ரூம் (30-Jul-15, 2:41 pm)
சேர்த்தது : கொட்ட்ரூம்
Tanglish : vairamutthu
பார்வை : 136

மேலே