பிரதாப்பு

ஆப்பு, ஆப்பு வைக்கறதுன்னு கேள்விப்பட்டிருக்கேன். அடுத்தவங்களுக்கு ஆப்பு வைக்கற ஆசாமிங்க ரொம்ப மோசமானவங்க. அந்த பக்கத்தூட்டுக் கொழந்தையைப் பிறதாப்புன்னு கூப்படறாங்க. பாவம் இந்தப் பச்சப் பிள்ளையா பிறருக்கு ஆப்பா வக்கப் போறான். அவனப் போயி பிறதாப்புன்னு கூப்படறாங்களே. இதெல்லாம் என்னடா அமுதா?

தாத்தா ஒலகத்திலே சினிமா ரசனையில தமிழருக்கு இணையா வேற எந்த மொழி பேசறவங்களும் கெடையாது. மொத மொதல்லா நடிகர் ஒருவரை முதலமைச்சர் ஆக்கிய பெருமையும் தமிழர்களுக்குத் தானே உண்டு. இப்பெல்லாம் தமிழ்ப் பேர பிள்ளைங்களுக்கு வைக்கிறது கேவலம்ன்னு நெனச்சு பிள்ளைங்களுக்கு இந்திப் பேர வைக்கிற பெற்றோர்கள் 98% க்கு மேல இருப்பாங்க. சினிமாவிலயும் தொலைக் காட்சித் தொடர்களிலும் வர்ற இந்திப் பேருங்களத் தாம். பிள்ளைங்களுக்கு வைக்கறாங்க. அதிலெ படிச்ச அல்லது அரைகொறையாப் படிப்புப் படிச்ச பெண்கள் தான் முன்னிலை வகிக்கறாங்க.


அப்பிடியா. சரி பிறதாப்புன்னா என்ன அர்த்தம்னு சொல்லுடா கண்ணு.

தாத்தா அந்தப் பையம்பேரு பிறதாப்பு இல்ல தாத்தா. ப்ரதாப்.

சரி அது எந்த ஆப்போ. அந்தப் பேரோட பொருள் என்னன்னு சொல்லு.

ப்தராப்-ன்னா மேன்மை-ன்னு அர்த்தம்.

ஏ அந்தக் கொழந்தைக்கு மேன்மை-ன்னு தமிழ்ல பேரு வச்சாக் குடியா முழுகிப் போகும்.
--------
சிரிக்க அல்ல. சிந்திக்க. தமிழ்ப் பற்று உள்ளவர்களுக்காக.
--------

எழுதியவர் : மலர் (30-Jul-15, 3:45 pm)
பார்வை : 146

சிறந்த நகைச்சுவைகள்

மேலே