நாயகன் பரிசளித்த நாணம்
மாமன் அவன்வருகை யில்அன் னம்நீ
புன்னகைத்திட வாசல் தொடும் உன்வாசம்
வீரன வனைவர வேற்றிடஅவன் கண்பார்க்கும்
ஓர்தருணம் சிவந்திடு தோஉன் கன்னம்
தோகைமயி லேயுனைக் காணத்தேவன் அவன்
தேடி வந்தான் மேகமென உன்குழலில்
சாய்ந்திடத் தான்பாய்ந்து வந்தான் நிலவேநீ
ஒளிகாட்ட தடுக்கிறதோ உன் நாணம்!
மன்ன னவன்உன் மதிமுகம் அறியசிறு
மூக்குத்தி ஒளிபோதும் சிங்காரக் கண்ணன்
அவன் சிரிக்க சிணுங்கும் உன்கொலுசும்
காதல் மோகத்தினால் ராகம் பாடும்!