சிதைந்த தூபி சிறப்பிக்கப்படுமா
ரவை வேட்டுக்கள் ஊரின் அமைதியை சீர்குலைத்தது ஆண்கள் பாதுகாப்புத் தேடி அலைந்தார்கள் நாய்கள் குறைக்கும் சத்தங்கள் அலைமோதிய ஊருக்குள் வெறி வாடைகள் நுழைந்தன
பாதுகாப்புக்காய் குழுமிய இடம் வெள்ளைக்காரன் முதலைக்குடாவில் நிறுவிய இறால் பண்ணை
அங்கு பயத்தில் தஞ்சம் புகுந்த அப்பாவி தமிழர்களை வெறியாட்டம் ஆடி அந்த ஆட்டம் அடங்காமல் அங்கிருந்து அழைத்து வந்து மகிழடித்தீவு சந்தியில் பல நூறு உயிர்களை நிலம் விழுங்கிகள் இயந்திர துப்பாக்கிகளாலும்,இயந்திர வண்டி சக்கரங்களாலும் எரியூட்டப்பட்டு மிக பயங்கரமாக கொல்லப்பட்டார்கள்
இன்று கூட அருகில் வசிப்பவர்களைக் கேட்டல் அவர்களின் அழுகை இன்றும் கேட்கின்றது என்பார்கள் அந்த நாள் படுகொலை செய்யப்பட்ட அப்பாவி மக்களின் ஆத்மாவை ஒன்றிணைத்து நினைவுத்தூபி மகிழடித்தீவு சதுர்க்கத்தின் இடது பக்கமாக இத்தூபி புனரமைக்கப்பட்டது
அங்கு கொல்லப்பட்ட மக்களின் பெயர்கள் பொறிக்கப்பட்ட வாறு வடிவமைக்கப்பட்டிருந்தது பல சூட்சிமங்களால் நிலம் விழுங்கி வந்தவர்களால் 2006 ஆண்டளவில் கோர நிகழ்வாக நினைவுத்தூவி சிதைக்கப்பட்ட நிலையில் ஒன்பது வருடங்களாக யாராலும் புனரமைக்கப்படாது கிடப்பது வேதனை அளிக்கின்றது
அபிவிருத்தி அமைச்சர்களாகவும் ,முதல் அமைச்சர்களாகவும் ,பாரளமன்ற அமைச்சர்களாகவும் தமிழர்கள் இருந்தார்கள் ,இருகின்றார்கள்
இறந்த ஆத்மாக்களின் நினைவுத்தூபியை திருத்தி அமைக்க முன்வாரத இவர்களால் எப்படி எமது மக்கள் ,வளங்கள் காப்பாத்த முடியும்
வாக்குகளுக்காய் வாசல் வரை வந்து நிக்கும் இவர்கள் வாக்குகளால் ஆசனம் கிடைத்தால் வாசதியாய் வாழ மட்டுமே பழகிக்கொள்வார்கள்
இனிவரும் புதிய அரசியல் வாதிகளாவது கோபுரம் இடிந்து கிடக்கும் குற்றம் புரியாத தமிழர்களின் ஆத்மா சங்கமித்த நினைவுத்தூபி மிண்டும் அழகு பெறுமா ?
சுயலாபத்துக்காக அரசியலில் இருப்பவர்களை ஓரம் கட்டி விட்டு மக்களுக்காக பயணிப்பவர்களையும் புதிதாய் பதவியேர வருவோர்களையும் எமது வாக்கு உரிமையை உகந்தளித்து அவர்களின் இனப்பற்றையும் இனம் காண்போம் .....
மட்டுநகர் கமல்தாஸ்
(மட்டு மதியகன் )