அப்துல் கலாம் - கவிதாஞ்சலி
இயற்கையதன் பாதைமாற்றி
செயற்கைக்கோள் எய்தவனே!
இயற்கையெய்துவிட்டாய் - உனைமீட்க
செயற்கைக்கோள் ஏதுஇங்கே!
விண்கலம் பலவென்ற உன்னை
நின்காலம் வென்றது ஏனோ?
உன்னிதயம் நின்று விட்டால்
மண்அதுதான் உன் இடமோ!
உன் நோக்கோ முன்நோக்கியபோது
மண் நோக்கியதோ உன்மேனி!
சந்திரனில்நீ ஏற்றிவைத்த கொடியதுவே
எந்திரனாம் உன்மேனி போர்த்தியதே!
நட்டுவைத்த மரங்களெல்லாம்
பட்டுவிட போகுதைய்யா
விட்டுவிட்டு போய்விட்டாய்
தொட்டுவிடா தூரமங்கே!
கனவுகான சொன்ன நீயோ
கண் மூடி உறங்குகின்றாய்
நான் கனவுகாண கண்மூட
உன் முகமே காண்கின்றேன்!
நின் புகழின் உச்சமதை
விண் கலமும் தொட்டுவிடா!
என் பணிதான் இனியிங்கே
உன் பணியை தொடர்வதுவே!
தாய் திருநாட்டின் பெருமகனே
பேய் கரும்பில் உறங்குகின்றாயே!