உன்னை எழுதுகிறேன் என்னை எழுதியவளே
உன்னை எழுதுகிறேன்... என்னை எழுதியவளே...அம்மா,
நான்,
பள்ளிக்கு போகையிலே,
கன்னத்தை அழுத்திபிடித்து தலையில் வடுகெடுத்த, அந்த கருப்பு வெள்ளை வண்ணங்கள்..,
என் எண்ணத்தை அழுத்திபிடித்து நினைவால் வருடியதே...
சமைக்கும் போது,
உன் உள்ளிருக்கும் ஆக்ஸிஜனையெல்லாம் ஒன்றாக வெளிகொணர்ந்து, தீயின் ஆயுளை கூட்டினாய்...
உன் மேனியை மெழுகாய் அந்த அனலில் வாட்டினாய்...
உன் ஆயுளை உணவுடன் சேர்த்து எனக்கு ஊட்டினாய்...
குடும்ப சூழ்நிலையால்,
வீட்டின் பின்வாசல் அருகே நீ அமர்ந்து.., உன் கண்வாசல் வழியே வடித்த வலிகள்.., இன்னும் என்னுள் வாழ்ந்து கொண்டிருக்கின்றன...
எனக்கு வேண்டியதையெல்லாம், நான் வேண்டாமலே, வேண்டாம் வேண்டாம் எனும்வரை கொடுத்தாயே...
முடிந்தால் எனக்கும் ஒரு வாய்ப்பு கொடு தாயே....