பெண் குழந்தை
தொலைதூரம்.......... ஒளியின் வழியில் சின்னச்சின்ன எட்டுவைத்து மணல் தரையில் நிலவை நோக்கி தங்கரதம் நகர்ந்து வரும் அழகல்லவா.....மிக மெல்லிய பொற்பாதம்......பவழமல்லி போல்தேகம்......அசைந்து அசைந்து நகர்கையிலே மணலோடுஉரையாடல்....... காற்றோடுஒருபாடல்.......
நான் புது மங்கை
என் முதல் பயணம்
உன்மடிமேல
வலித்தால் சொல்வாய்
உன் குளிர்மேனி
என் பெரும் அழுத்தம் கொள்ளுமோ
நான் கொண்ட பயத்தால் உன்மேலேவிழுந்தேன்..................
காற்றே.......என் விரலின் அசைவால் இசையாய் ஆனாய் வளையல் உரச குழைந்தே போனாய்......சின்னச்சின்ன சிரிப்பில் நீயே தென்றல் ஆனாய்.. தவறிவிழுகையிலே மூர்ச்சையேஆனாய்............