என் பிறந்தநாள் கவிதை கவிஞர் சுந்தர வினாயகமுருகன்
அகவை 35 அடியெடுத்து வைக்கும்
நான் சாதித்த சாதனைதான் என்ன ?
விதியோடு போராட பயந்து
வயதினை விரட்டும் சராசரி மனிதனாகவா
வாழ்கிறேனா நான் ?
காலத்தை கடமையாய் கழிக்கும்
எத்தனையோ பேர்களோடு
என் வாழ்க்கையும் சோம்பேறியாய்
நகருகின்றதா ?
என்னுடைய பங்களிப்புகள்
சமுதாயத்தில் என்னென்ன ?
நான் சமுதாய சீர்திருத்த வாதியா ?
இளைஞர்களின் வழிகாட்டியா?
நாட்டிற்கு நான் செய்ததுதான் என்ன ?
இதெல்லாம் எனக்கு நானே கேட்கும் கேள்விகள் ..........
சமுதாயத்தில் கடமைக்காய் வாழ்ந்து
கரைந்து போகும் சராசரி மனிதனாய் வாழ
எனக்கு எள்ளளவும் விருப்பமில்லை ...........
உயர்ந்த எண்ணங்களையும் செயல்களையும்
சமுதாயத்தில் பரப்பும்
கருவியாக செயல்படவே
என்னுடைய முழு விருப்பம் ..........
பொருளாதாரத்தில் பெரும் சாதனை செய்திராவிடாலும்
சமுதாயத்தில் சாதனை செய்ய
அவ்வளவு அவா .............
கருத்துக்களை சுமந்து
நல் கவிதைகளை படைத்து
புத்தகங்களாய் பதித்திருக்கிறேன் ,
"அர்த்தமுள்ள கிறுக்கல்கள் "............
விடியல் வேண்டி விடுதலை குரல் என்னும்
வார இதழால் வார்த்தை தோரணம் கட்டி
சமுதாய சீர்திருத்த எண்ணங்களில்
முதலிடத்தில் "மதுவை ஒழிப்போம் மனிதம் காப்போம் "...........
எழுத்து இணையத்தில் என்னுடைய எண்ணங்களை
கவிதைகளாய் பதித்திருக்கிறேன் -
அதில் இளைஞரின் ஏற்றம் , தன்னம்பிக்கை , மது ஒழிப்பு ,
பெண்கள் பாதுகாப்பு என சமுதாய ஏற்றத்திற்கான
எல்லா தலைப்புகளிலும் கவிதைகள் தாராளமாய் ............
வீண் பேச்சுக்களை தவிர்த்து
வேண்டியவர்களோடு அர்த்தமுள்ள விவாதங்களையே
ஆலோசிக்கிறேன் , அவசியமானவற்றையே
ஆலோசிக்கிறேன் ..........
மண்ணில் பிறந்தும் விண்ணிற்கு உயரும்
வாழ்க்கை தத்துவத்தை
வாழ்ந்தவர்களின் வரலாற்றில் தேடுகிறேன் ..............
உயர்வான கொள்கைகளையே
உயிரின் மூச்சாய் கொண்டு
நடமாட நாளும் பழகிக்கொள்கிறேன் ............
என்னுடையே எல்லா காலகட்டத்திலும்
இலக்கணம் பிசரா மனிதனாய்
இமயம் காணும் மனிதனாய்
இரக்கமுள்ள மனிதனாய் வாழ
இதயபூர்வமாய் இந்நாளில்
உறுதி ஏற்கிறேன் ...............
வாழ்த்துங்கள் உறவுகளே , சொந்தங்களே , நண்பர்களே ,
இப்படிக்கு
கவிஞர் சுந்தர வினாயகமுருகன்
ஆசியர் , விடுதலைக்குரல் வார இதழ் ,
தலைவர் , மது ஒழிப்பு இயக்கம் , புதுவை ,