கனவு நாயகனே கலாமே
![](https://eluthu.com/images/loading.gif)
கனவு நாயகனே கலாமே!
காலத்தால் அழியா காவியமே!
தமிழ் பெற்ற தவமே!
தாயகம் போற்றும் தங்கமே!
அக்னிச்சிறகுகளை அருளிய அறிவே!
அகிலமே அதிசியக்கும் அறமே!
ஏழ்மையில் அரும்பிய வலியவனே!
எல்லோர் விரும்பும் எளியவனே!
சாதிக்க பிறந்த சரித்திறமே!
சகாப்தம் கண்ட யதார்த்தமே!
இளைஞரே இமயமென்ற இசையே!
தேசத்தை நேசித்த தென்றலே!
சிந்திக்கத் தூண்டிய சிகரமே!
அழிவில்லையுனக்கு நீயொரு அணையாதீபம்!!!