நீ என் நண்பேன்டா
பக்கத்திலே அமர்ந்து
பக்கம் பக்கமாய் பேசிச் சிரிக்கும்
பால முருகன்...!
இன்பமோ துன்பமோ
எப்போதும் ஆசீர்வதிக்கும்
எட்வின் ஜான்...!
முட்டை எடுத்தாலும் - நம்
முதுகு தட்டி முகம் மலரும்
முகமது மீரான்...!
கல்லூரிக் கல்ச்சுரல்ஸில்
பாங்க்ரா நடனம் ஆடும்
கரம்தீப் சிங்...!
தேசம் விட்டு வந்து
நேசமாகிப் போன
டேமிங் யாங் லீ...!
கடித்து ருசித்து
கனிவாய்த் தமிழ் பேசிடும்
கண்டி கதிர்காமன்...!
இப்படி உன் பெயர்
என்னவாக இருந்தாலும்
நீ என் நண்பேன்டா....!!!!!!
எழுத்து தளத் தோழர் தோழியர் அனைவருக்கும்
இனிய நண்பர்கள் தின நல்வாழ்த்துக்கள்...!!!
~ தப்தி செல்வராஜ், சாத்தூர்
(**குறிப்பு: படம் எந்த தவறான காரணங்களுக்காகவும் பதிவிடப்படவில்லை)