நண்பனே-குமரேசன் கிருஷ்ணன்

நண்பனே ...
நடந்துவந்த பாதையை
மறந்துவிடுபவர்களுக்கு
மத்தியில் ...

நான்
கடந்துவந்த பாதையின்
கால்தடங்கள்
'காயமுறுதலை'கூட
காணச்சகியாதவன் நீ ..

என் உயிரினை தாங்கி
மனிதவுருவில் உள்ள
என் இன்னொரு
மனசாட்சி நீ ..

'நண்பன்' என்ற சொல்லின்
அர்த்தங்களை
அகராதிகளில்
தேடிக்கொண்டிருக்கையில்
'அதன் அர்த்தமாய்' என் முன்னே
வந்தவன் நீ ..

தோல்விகள் கூட என்
தோழனிடத்தில்
படு தோல்வி
அடைந்துவிடும்மெனகூறி
துவண்டிருந்த என்னையும்
துடித்தெழச்செய்தவன் நீ ..

உயிரினை
காதலர்களும் தருகிறார்கள்
பரிமாறிக்கொள்வதன் மூலம்
ஆனால்
அது
பண்டமாற்று அல்லவா ?

நீ
உயிரினையும்
தருகிறாய்
எனக்காக
என்னிடத்தில்
எதுவும் பெறாமலே ?

உன்போல்
உயிர்த்துணை ஒருவன்
இருந்துவிட்டால்
இறந்துவிட்டாலும்
மறக்காமல்
மறுஜென்மம்
எடுத்துக்கொண்டே இருப்பேன்
மறுபடி ..மறுபடி ..
உன் மனதிற்கினிய
தோழனாய்
நான் பிறப்பதற்கு !

( அனைவருக்கும் இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்)
மறுபதிவு-குமரேசன் கிருஷ்ணன்

எழுதியவர் : குமரேசன் கிருஷ்ணன் (2-Aug-15, 1:17 pm)
பார்வை : 181

மேலே