நாளையே எரிக்கப்படட்டும் - உதயா

வைகறை நேரத்தில்
குளுமையை அணைத்துக் கொண்டு
அசைந்தாடும் தென்றலுடன் கூடிய
அமைதி நிறைந்த கணத்தினில்
ஏதோ ஒரு உயிரினத்தின் சத்தம்
என்னுள் எண்ண அலைகளை கீறிவிட்டு
மனதினை பிசைந்துக் கொண்டிருந்தது.

அந்த ஆதிவாசியின்
கற்பனை திறனுக்கு
எட்டா உயரத்தில்
நாகரீகம் உயர்ந்திருந்தும்
மனிதம் மட்டும்
மக்களின் மனதினில்
அரளி சுவையாக
பரிணாமம் அடைந்திருந்தது

வசதியெனும் போர்வைக்காக
பலர் தன்மானத்தை அஷ்தியாக்கி
இச்சை கடலினுள் கரைத்துவிட்டு
அவ்வப்போது வெட்கத்தினையும்
உணர்ச்சியினையும்
பிண்டமாக்கிக் கொண்டிருந்தனர்

வறுமையை வாழ்வாக அடைந்திருந்தும்
மனிதத்தின் தலைமகனாய் நின்று
தன்மானத்தை கௌரவமெனும்
அகல் விளக்கில் ஒளியாக்கி
புயலாக பூகம்பகமாக பிரளயமாக
இன்னல்கள் அளிக்கும்
மனிதம் மறந்தவர்களிடமிருந்து
அணையாமல் காத்து நின்றனர்

தர்மத்தின்மீது கொண்ட
அன்பிலும் மனித நேயத்திலும்
மூடர்களின் இடர்பாடு வேள்வியில்
மனமும் இதயமும் கருகி
சாம்பலாகியபோதும்
அவன் முகத்தினில்
புன்னகை மலர்களுக்கு
உயிர் கொடுத்தவாறே
போராட்டங்களை
தொடர்ந்துக் கொண்டிருந்தான்

அந்த
சலனமில்லா இரவினில்
பாரே துயிலின்
ஆழப் பகுதியில் மூழ்கியிருக்க
ஏதோ ஓர் உயிரினத்தின்
குரல் வேசத்தில்
தர்மம் கதறிக் கொண்டிருந்தது

இன்றுவரை
அடிவானத்தின் ஒருபுறம்
வைக்கப்படும் தீக்கொல்லி
மறுபுறம் சாந்தமாகும்
நிலைமாறி
நாளை
மனிதத்தாலும் தர்மத்தாலும்
ஒரே கணத்தில்
அடிவானத்தின் நால்புறமும்
தீ மூட்டப்படலாம்

எழுதியவர் : உதயா (2-Aug-15, 2:21 pm)
பார்வை : 196

மேலே