அவள்
பார்க்க மட்டுமே தெரிந்த
என் கண்களுக்கு
ரசிக்க கற்றுத் தந்தவள் அவள்..,
சுவாசிக்க மட்டுமே தெரிந்த
என் மூக்கிற்கு
வாசனிக்க கற்றுத் தந்தவள் அவள்..,
பேச மட்டுமே தெரிந்த
என் உதட்டிற்கு
சிரிக்க கற்றுத்தந்தவள் அவள்..,
அசைக்க மட்டுமே தெரிந்த
என் கைகளுக்கு
அணைக்க கற்றுத்தந்தவள் அவள்..,
தூங்க மட்டுமே தெரிந்த
என் இரவிற்கு
கனவு காண கற்றுத்தந்தவள் அவள்..,
வெயிலால் மட்டுமே நிரம்பிய
என் வாழ்க்கையில்
நிழலாய் அமைந்தவள் அவள்..,
இத்தனை
அத்தனை
அழகிய
அதிசயம்
செய்த அவளை நட்பில் வைக்க
மனம் வரவில்லை...
நட்பு வாழ்நாள் முழுக்க
தொடருமா....?
சந்தேகம் எனக்கு,
அவள் எனக்கு வாழ்நாள் முழுக்க
வேண்டும்...
அதனால்தான் உறவில்
சேர்க்க பார்க்கிறேன்.