இதமான இரவும் இனியவளும்

கருஞ்சிகை உன்
காதோரம் கிடக்க
காமம் குடித்த என்னிதழோ
மெல்ல அதை கடக்க

பனி சிந்தும் மைவானை என்
மேனி முந்தும் வியர்வை சிந்தி..!

முரடான என் முன் தோலில்
முல்லை மலரென மோதி
மோகம் தூவும் உன்னிரு
மேகம் வெட்கம் சிந்தி
நிரப்புமோ என் தொப்புள்
குளங்களை..?

துணி துவைக்கும் சோப்பு வாங்கி
நீர் ஊற்றி நுரை தழும்பக் கரைத்து
விரல் கொண்டு அந்நுரை
பிடித்தனோ..?
இல்லை உன் இடைதான்
பிடித்தனோ..?

இடைதான் என்று மூளை
சொல்லியும் அதன்
விடைதான் புரியாமல்
விளையாடித் திரியும் என்
விரல்கள் சற்று
விவரமாகவே..!

இதுவரைதான் அந்த நிலவும்
விண்மீன்களும் எனக்குச்
சொல்லியது மீதிக் கதை கேட்டேன்
நாங்கள் வெட்கம் கொண்டு
முகிலின் பின்பு மறைந்து
கொண்டோம் என்கின்றன..!

என்னசெய்வது நானும்
மயங்கித்தான் போனேன்
இதமான இரவில் என்
இனியவளுடன்...




செ.மணி

எழுதியவர் : செ.மணிகண்டன் (2-Aug-15, 8:51 pm)
பார்வை : 217

மேலே