பேர் காப்பேன்

அப்பா அப்பா கேளப்பா
அன்பு தெய்வம் நீயப்பா,
தப்பாய்ச் சொன்னால் நீசிரிப்பாய்
தண்டனை ஏதும் தரமாட்டாய்,
எப்போ அம்மா வந்திடுவாள்
என்ன வெல்லாம் தந்திடுவாள்,
எப்பவும் எனக்குநீ வழிகாட்டி
என்றும் காப்பேன் உன்பெயரே...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (2-Aug-15, 6:37 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
Tanglish : per kaappen
பார்வை : 55

மேலே