அந்த நாளும் மீளுமோ

இரண்டு மாடிக்கட்டிடம்....
பஞ்சு மெத்தைக்கட்டிலும்...
நித்தம் ஒரு சாப்பாடும்...
எத்தனை தான் வந்த போதும்...

சின்னஞ்சிறு குடிசைக்குள் ...
ஓலைக்கூரை ஓட்டைக்குள்...
வட்ட நிலவை பார்த்துக்கொண்டு ...
அம்மா ஊட்டிய சோறுண்டு...

அண்ணன் அக்காவோடு ஒட்டிக்கொண்டு...
அம்மா எனை கட்டிக்கொண்டு...
வண்ணக்கதை பேசையிலே....
கண்ணுறக்கம் தேடினோம் ....

அந்த நாளும் மீளுமோ....அந்த சுகம் காணுமோ....

எழுதியவர் : தோழி.. (2-Aug-15, 7:22 pm)
பார்வை : 89

மேலே