விரட்டி பிடித்தலே வெற்றியின் ரகசியம்
இலக்குகளில் எண்ணத்தை ஒருநிலை படுத்தி
தொடருங்கள் பயணத்தை துணிச்சலோடு ,
வெற்றி நிச்சயம் ............
கடின பயணத்தில் கல்லும் முள்ளும்
நிறைந்த சாலையில்தான் தான்
இருக்கிறது இமாலய வெற்றி ...........
அடிப்படையில் இருந்தே
ஆரம்பித்திருக்கிறது அனைத்து வெற்றியார்களின்
அனுபவ வாழ்க்கை ............
ஏற்றுக்கொண்ட எல்லா செயல்களிலும்
எண்ண தெளிவோடு
இயங்குங்கள் இலக்கு சாதகம் ..........
தோல்வி பதர்களை தூற்றி
வெற்றி விதைகளை விரைவாய் சேருங்கள்
வாய்ப்பு காற்று அடிக்கும் வரையில் .........
அடுத்தவரின் செயல்களில்
அநாகரீக தலையீட்டை தவிர்த்தாலே
செயல்களில் ஒருநிலை உண்டாகும் ............
எக்காலத்திலும் தோல்விகளின் காயத்தினை
நினைவில் சுமக்காதீர்கள்
அது வெற்றியை விரையமாக்கலாம் .............
இயங்காமல் கிடந்தால்
எதுவுமே சாத்தியமில்லை
நினைவில் கொள்ளுங்கள் ................
விரட்டி பிடித்தலே
வெற்றியின் ரகசியம் ............