வலி அழகானது
மகாபாரதப் போர் முடிந்த பிறகு கிருஷ்ணர் தேவலோகம் புறப்படுகிறார்,
அவர் புறப்படும் முன் தாயைப் பார்த்து தாயே தங்களுக்கு என்ன வரம் வேண்டும் கூறுங்கள் தாயே என கேட்கிறார்,
அதற்கு தாயார் கூறுகிறார் நான் இன்னும் எத்தனை பிறவி எடுத்தாலும் தீரா வலியும் வேதனையும் வேண்டும்.அப்பொழுது தான் கடவுளான உன்னை ஒரு போதும் மறவாமல் உன்னையே நினைத்து வாழ இயலும்,இதுவே நான் விரும்பி கேட்கும் வரம்,
நிம்மதியை விட, மகிழ்ச்சியை விட வலியும் வேதனையும் மிக அழகானது
நிம்மதி வந்தால் அனைவரும் அணைத்தையும்,கடவுளையும் கூட மறந்து விட்டு விடுகின்றனர் என்றார்
கிருஷ்ணரும் தாயார் வேண்டிய வரத்தை தருகிறார்.