ஆடிப் பெருக்கு

அனைவருக்கும்
ஆடிப்பெருக்கு
நல்வாழ்த்துக்கள்.
*
காவிரித் துள்ளிப் பாய்ந்து வரும்
கழனியெலாம் செழித்து வரும்
உணவு பொருள் விளைச்சல் தரும்
உழவுத் தொழில் நடந்து வரும்.
*
மங்களம் தேடி வரும்
மனசுப் பொங்கி வரும்
அகல்விளக்கு ஏற்றி விடு
அலைகளிலே படகு விடு.
*
ஆசைகள் சொல்லி விடு
ஆனந்தம் பகிர்ந்து விடு
ஆடிப் பெருக்கு நாளிலே
அன்னையிடம் வேண்டி விடு.
*

எழுதியவர் : ந.க.துறைவன் (3-Aug-15, 9:50 am)
Tanglish : aadip pourkku
பார்வை : 544

மேலே