முத்துக்குளி

முயற்சி என்ற முத்தெடுக்க...
மூழ்கி நீயும் முத்துக்குளி..
மூன்று முறை முயன்று விட்டு....
முடியாதென்று முனங்காதே....
முயன்றால் முடியாதது இல்லையென்று....
மூவாயிரம் முறை முயன்றிடு....
முட்கள் கூட முல்லை மலராகும்...
முயன்று விட்டு முகர்ந்து பார்....
மதிப்பும் மாண்பும் உன் முன்னே.....
மண்டியிட்டு முழங்கும் மனிதா நீ முயன்று பார்.....